டெங்கு,பன்றிக்காய்ச்சலை தடுக்க வேண்டிய முதலமைச்சரும், குட்கா அமைச்சரும் ஆண்டுவிழா கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள் …!திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு
அரசின் அலட்சியத்தால் அப்பாவி மக்களின் உயிர் பறிபோவதை ஒருபோதும் ஏற்க இயலாது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில்,சென்னையில் 7வயது இரட்டை குழந்தைகள் உட்பட தமிழகம் முழுவதும் 13 பேர் டெங்கு,பன்றிக்காய்ச்சலுக்கு உயிரிழந்திருக்கிறார்கள். இதனை தடுக்கவேண்டிய முதல்வரும், குட்கா புகழ் அமைச்சரும் அதிமுக-வின் 47வது ஆண்டுவிழா கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள். அப்பாவி மக்கள் உயிரைவிட கொண்டாட்டம் பெரிதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அதேபோல் அரசின் அலட்சியத்தால் அப்பாவி மக்களின் உயிர் பறிபோவதை ஒருபோதும் ஏற்க இயலாது. இனியும் தமிழக அரசை நம்பிக் கொண்டிருக்காமல் திமுகவின் மருத்துவரணி ஆங்காங்கே மருத்துவ முகாம்களை நடத்துவதோடு, மக்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துகிற பணிகளில் உடனடியாக ஈடுபட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.