தமிழகத்தில் வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்! பொது சுகாதாரத்துறை விடுத்த எச்சரிக்கை!

dengue

சென்னை: தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர், கோவை, மதுரை, தேனி, நாமக்கல், அரியலூர், திருவண்ணாமலை, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தஞ்சாவூரில் டெங்கு காய்ச்சல் அதிகரித்துள்ளது. இம்மாவட்டங்களில் டெங்குவுக்கான வழிகாட்டுதல்களை கடைப்பிடிக்க மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

டெங்கு காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் மே 16ஆம் தேதி ‘தேசிய டெங்கு தினம்’ கடைபிடிக்கப்படுகிறது. குறைந்தளவு விழிப்புணர்வு இருந்தாலே போதுமானது, தம்மை டெங்குவில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.

கொசுக்கள் மூலம் மட்டுமே இந்தக் காய்ச்சல் பரவும் என்பதால், கொசுக் கடியில் இருந்து நம்மை பாதுகாப்பதே டெங்குவை தடுக்க முதல் வழி. இதற்காக, நம்மைச் சுற்றியுள்ள நீர்த் தொட்டிகளை மூடி வைக்க வேண்டும்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருவதால், மருத்துவமனைகளும் உள்ளாட்சி நிர்வாகங்களும் டெங்கு பரவல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மேலும், பருவமழை காலத்திலும் அதற்கு பிந்தைய காலத்தில், நோய் பரவும் அபாயம் இருக்கும் எனபதால், அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளின் காய்ச்சல் அறிக்கைகள் சேகரிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்ட்டுள்ளது.

நோய் தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தவும், அனைத்து மாவட்ட தலைமை மருத்துவமனைகளும் தயார் நிலையில் இருக்கவும் பொதுசுகாதாரத்துறை இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்