கொரோனா வைரசின் தாக்கம் தற்போதும் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நோய் பாதிப்புகளை கட்டுப்படுத்த மத்திய,மாநில அரசு பலக்கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நிலவும் வானிலையால் கொரோனா தொற்றுடன் வைரஸ் காய்ச்சல், பன்றி காய்ச்சல், மலேரியா மற்றும் டெங்கு போன்ற பருவகால நோய்கள் பரவுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாக உள்ளன.
இதற்கு முன் ஐதராபாத்தின் சில நர்சிங்ஹோம்கள் மற்றும் கிளிக்குகளில் மலேரியா, டெங்கு பருவகால நோய்கள் இருப்பதற்கான அறிகுறிகள் தென்படுவதாக மருத்துவ நிபுணர்கள் சந்தேகிக்கின்றனர்.
இந்நிலையில் இவ்வெண்ணிக்கை அதிகமானல் டெங்கு காய்ச்சல் பாதிப்பும் அதிமாக வாய்ப்புள்ளது. இந்த பருவகால வியாதிகள், சீரற்ற வானிலையால் மேலும் அதிகமான பாதிப்புகளை ஏற்படுத்தும். டிசம்பர் வரை பருவகால வியாதிகள் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதால் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரடு அதிகாரிகள் எடுக்க வேண்டும்.
இது தொடர்பாக சுகாதாரதுறை அதிகாரி கூறுகையில் கொரோனா பாதிப்புடன் பருவகால வியாதிகளும் உயர்ந்து வருவதால், தேவையற்ற பொதுக்கூட்டங்களை தவிர்த்தல், மாஸ்க் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது உள்ளிட்ட சுகாதார நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்று மக்களை நாங்கள் கேட்டுக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
பருவகால நோய்களின் தாக்கம் பரவத் தொடங்க உள்ளதால் அடுத்த 3 மாதங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது மிக அவசியம். மேற்கண்ட சுகாதார நடவடிக்கைகளால், தொற்று வியாதிகளின் தாக்கம் ஓரளவு குறையும் என்று சுகாதார துறை தரப்பில் கூறப்படுகிறது. இதுவரை, செப் 15 தேதிக்குள், கொரோனா பாதிப்புக்கும் அதிகமாக, தெலுங்கானா மாநிலத்தில் மட்டும் 500 க்கும் மேற்பட்ட பன்றிக்காய்ச்சல் பாதிப்பு மற்றும் சில இடங்களில் டெங்கு மற்றும் மலேரியா நோய்களுக்கான அறிகுறிகளுடன் மக்கள் அடையாளங்கள் காணப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெக்ஸாஸ் : உலகம் முழுவதும் பலரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருந்த மைக் டைசன் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த யூட்யூபர் ஜேக்பால்…
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை 2 வாரங்களுக்கு பின் நேற்று உயர்ந்த நிலையில், இன்று மீண்டும் குறைந்துள்ளது. அதன்படி,…
சென்னை : கங்குவா திரைப்படம் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்று மிகப்பெரிய ஹிட் ஆகும் நிலையில் , வெளியான நாளிலிருந்தே…
திருவனந்தபுரம் : கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் சபரிமலையில் அமைந்துள்ள ஐயப்பன் கோயில் நேற்று மாலை மண்டல பூஜைக்காக திறக்கப்பட்டது.…
சென்னை : கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று (நவம்பர் 16) சர்வதேச கருத்தரங்கு ஒன்று நடைபெற உள்ளது. இதில்…
தென்னாபிரிக்கா : இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி தொடரை…