அடுத்த 3 மாதத்திற்கு ஆபத்து..!அதிகாரிகள் கடும் எச்சரிக்கை-குவியும் அறிகுறிகள்!

Default Image

கொரோனா வைரசின் தாக்கம் தற்போதும் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நோய் பாதிப்புகளை கட்டுப்படுத்த மத்திய,மாநில அரசு பலக்கட்ட  நடவடிக்கைகளை  எடுத்து வருகின்றன.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நிலவும் வானிலையால் கொரோனா தொற்றுடன்  வைரஸ் காய்ச்சல், பன்றி காய்ச்சல், மலேரியா மற்றும் டெங்கு போன்ற பருவகால நோய்கள் பரவுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாக உள்ளன.

இதற்கு முன்  ஐதராபாத்தின் சில நர்சிங்ஹோம்கள் மற்றும் கிளிக்குகளில் மலேரியா, டெங்கு  பருவகால நோய்கள் இருப்பதற்கான அறிகுறிகள் தென்படுவதாக மருத்துவ நிபுணர்கள் சந்தேகிக்கின்றனர்.

இந்நிலையில் இவ்வெண்ணிக்கை அதிகமானல் டெங்கு காய்ச்சல் பாதிப்பும் அதிமாக வாய்ப்புள்ளது. இந்த பருவகால வியாதிகள், சீரற்ற வானிலையால் மேலும் அதிகமான பாதிப்புகளை ஏற்படுத்தும். டிசம்பர் வரை பருவகால வியாதிகள் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதால் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரடு அதிகாரிகள் எடுக்க வேண்டும்.

இது தொடர்பாக சுகாதாரதுறை அதிகாரி கூறுகையில் கொரோனா பாதிப்புடன் பருவகால வியாதிகளும் உயர்ந்து வருவதால், தேவையற்ற பொதுக்கூட்டங்களை தவிர்த்தல், மாஸ்க் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது உள்ளிட்ட சுகாதார நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்று மக்களை நாங்கள் கேட்டுக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

பருவகால நோய்களின் தாக்கம் பரவத் தொடங்க உள்ளதால் அடுத்த 3 மாதங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது மிக அவசியம். மேற்கண்ட சுகாதார நடவடிக்கைகளால், தொற்று வியாதிகளின் தாக்கம் ஓரளவு குறையும் என்று சுகாதார துறை தரப்பில் கூறப்படுகிறது. இதுவரை, செப் 15 தேதிக்குள், கொரோனா பாதிப்புக்கும் அதிகமாக, தெலுங்கானா மாநிலத்தில் மட்டும் 500 க்கும் மேற்பட்ட பன்றிக்காய்ச்சல் பாதிப்பு மற்றும்  சில இடங்களில் டெங்கு மற்றும் மலேரியா நோய்களுக்கான அறிகுறிகளுடன் மக்கள்  அடையாளங்கள் காணப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்