10 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ளது -சுகாதாரத்துறை செயலாளர்

10 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், வட சென்னை, வேலூர், காஞ்சிபுரம், தூத்துக்குடி, தருமபுரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ளது.
சென்னையில் 100-க்கும் அதிகமானோர் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.தமிழகம் முழுவதும் 3,500க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்றுள்ளனர் என்று பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.