கடலூரில் 9 பேருக்கு டெங்கு! 100 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதி!
கடலூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் இன்று நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கடும் காய்ச்சலால் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு ரத்த பரிசோதனை எடுக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதில் தற்போது வரை 9 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதியாகி உள்ளது. அதனால் அவர்களை மட்டும் தனியாக வைத்து அவர்களுக்கு மேலும், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் பலருக்கு காய்ச்சல் இருப்பதாகவும் அறியப்பட்டுள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை இணை இயக்குனர் கீதா அவர்கள், கூறுகையில் டெங்கு காய்ச்சல் பரவுவது பொதுமக்கள் மழை நீரை தேங்க விடுவதன் காரணமாக அதன் மூலம் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு காய்ச்சல் பரவுகிறது எனவும், மழைக்காலங்களில்நீரை மூடி வைக்கவேண்டும். மழைநீர் தேங்காமல் பாதுகாக்க வேண்டும் எனவும் கூறினார். காய்ச்சல் இருப்பவர்கள் கடைகளில் மாத்திரை வாங்கிக்கொண்டு, தாங்களே மருத்துவம் பார்ப்பதை தவிர்த்து, மருத்துவமனைகளுக்கு சென்று உடனடியாக பார்க்க வேண்டும் என கூறியுள்ளார்.