சென்னையில் 60 பேர் டெங்கு காய்ச்சல் சிகிச்சைக்காக அனுமதி!
தமிழ்நாட்டில் தற்போது சில மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் பரவி வருகிறது. இது தொடர்பாக பல்வேறு சுகாதார நடவடிக்கை எடுக்கப்படும், மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டும் வருகிறது.
இந்நிலையில் தற்போது சென்னையில் மட்டும் 60 பேர் டெங்கு காய்ச்சலுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 401 பேர் மற்ற வகை வைரஸ் காய்ச்சலுக்காகவும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். என சுகாதாரத்துறை தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது .