திருத்தணியில்-12, மதுரையில்-6! தமிழகத்தை எச்சரிக்கும் டெங்கு!

தமிழகத்தில் தற்போது டெங்கு காய்ச்சல் அறிகுறி சில மாவட்டங்களில் உறுதியாகியுள்ளது. அதன்படி, திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் இதுவரை 12 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதியாகி, அவர்களுக்கு அங்கு அரசு மருத்துவமனையில் தனி வார்டில் வைத்து சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அதேபோல மதுரையில் டெங்கு காய்ச்சல் 6 பேருக்கு இருப்பது அறியப்பட்டுள்ளது. இதுகுறித்து மதுரை ராஜாஜி மருத்துவமனை டீன் கூறுகையில் இதுவரை மதுரை அரசு மருத்துவமனையில் 6 பேருக்கு டெங்கு இருப்பதாகவும், மேலும் 47 பேருக்கு வைரஸ் காய்ச்சல் பரவி உள்ளதாகவும் அவர்கள் அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
வசூலில் சக்கை போடு… ரூ.100 கோடி கிளப்பில் இணைந்த GBU.!
April 15, 2025
சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்.!
April 15, 2025