டெங்கு வழக்கை ஜன.4-க்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை!
2017 அக். வரை டெங்கு காய்ச்சலால் 16,301 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 52 பேர் உயிரிழப்பு – சுகாதாரத்துறை.அக். மாதத்திற்கு பின் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு ஜன.4-க்கு வழக்கை ஒத்திவைத்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை.
டெங்குவால் உயிரிழந்தவர்களுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிய வழக்கில் சுகாதாரத்துறை பதில் மனு. கடந்த 5 ஆண்டுகளில் இந்தாண்டு தான் டெங்கு பாதிப்பு அதிகமாக உள்ளது – பதில் மனுவில் சுகாதாரத்துறை தகவல்.