அம்பேத்கர் படத்திற்கு காவி உடை.! தமிழகம் முழுவதும் விசிகவினர் ஆர்ப்பாட்டம்.!

Default Image

அம்பேத்கர் படத்திற்கு காவி உடை அணிவித்ததை எதிர்த்து தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் விசிகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். 

அண்மையில் அம்பேத்கர் நினைவு நாளில், இந்து மக்கள் முன்னணி கட்சியை சேர்த்தவர்கள், அவரது உருவ படத்திற்கு காவி உடை அணிவித்து அவருக்கு திருநீறு பட்டை பதிவிட்டு போஸ்டர் ஒட்டியிருந்தது. இதற்கு பலரும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

ஏற்கனவே திருவள்ளுவர், பெரியார் படத்திற்கு காவி உடை அணிவித்தது போல தற்போது அம்பபேத்கர் படத்திற்கும் அதே போல காவி உடை அணிவித்ததுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏற்கவே மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தது போல இன்று ஆர்ப்பாட்டம் நடைப்பெற்று வருகிறது.

தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. சென்னையில் நடைபெறும் போராட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவன் தலைமையேற்று நடத்தி வருகிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்