தமிழகம் முழுவதும் மத்திய அரசை கண்டித்து, திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது.
தமிழகம் முழுவதும் மத்திய அரசை கண்டித்து, திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது. இதுகுறித்து, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், வேளாண் சட்டங்கள், பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு, தனியார்மயமாக்கல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் மத்திய அரசின் நடவடிக்கைகளை கண்டித்து போராட்டம் நடத்த தேசிய அளவிலான எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
இதன்படி, வருகிற 20ந்தேதி காலை 10 மணியளவில் தி.மு.க. நிர்வாகிகள், தங்களின் இல்லம் முன்பாக கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த கண்டன போராட்டத்தில், கூட்டணி கட்சியினருடன் இணைந்து தி.மு.க.வினர் ஈடுபட வேண்டும் என்றும், மத்திய அரசின் நடவடிக்கைகளை கண்டித்து மதச்சார்பற்ற ஜனநாயக இந்திய குடியரசை பாதுகாப்போம் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. `
கோவை : சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர் காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி,…
வேலூர் : தமிழகத்தில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக இப்போதே தங்களுடைய அரசியல் வேலைகளை…
சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…
கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…
திருவண்ணாமலை -தமிழ் மாதங்களில் எட்டாவது மாதமாக வரக்கூடியது தான் கார்த்திகை மாதம் .இந்த கார்த்திகை மாதத்தில் அனைவரும் வீடுகளில் விளக்கேற்றி…