பஞ்சு மற்றும் நூல் விலை உயர்வை கண்டித்து வரும் 27-ஆம் தேதி தேமுதிக சார்பில் ஆர்ப்பாட்டம் – விஜயகாந்த்
பஞ்சு மற்றும் நூல் விலை உயர்வை கண்டித்து வரும் 27-ஆம் தேதி தேமுதிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
பஞ்சு மற்றும் நூல் விலையை மத்திய அரசு தொடர்ந்து உயர்த்தி வரும் நிலையில், ஜவுளித் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆடைகளின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் பஞ்சு மற்றும் நூல் விலை உயர்வை கண்டித்து தேமுதிக சார்பில் வருகின்ற 27-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. அதன்படி ஈரோடு மாவட்டம் வீரப்பன் சத்திரம் பேருந்து நிறுத்தம் அருகில் தேமுதிக சார்பில் கழக பொருளாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.