நீட் தேர்வை ரத்து செய்ய கோரி..உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம்.!
கொரோனா வைரஸ் காரணமாக தற்போது நாடு முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காரணமாக பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாமல் உள்ளது. இதனால், கடந்த ஜூன் மாதம் திறக்கவேண்டிய பள்ளிகள் திறக்கப்படததால் தற்போது மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடங்கள் நடைபெற்று வருகிறது.
ஆனால், இந்த ஆன்லைன் வகுப்பில் பல சிக்கல்கள் இருப்பதாக குற்றம்சாட்டு எழுந்து வருகிறது. மேலும், கொரோனா மத்தியில் நீட் தேர்வை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனால், நாடு முழுவதும் பல கட்சி தலைவர்கள் மற்றும் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
கொரோனா பரவல் அபாயம் காரணமாக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், ஆன்லைன் வகுப்புகளை முறைப்படுத்த கோரியும் திமுக இளைஞரணி சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது.
அதன்படி, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.