திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கத்தில் தீண்டாமை சுவர் தகர்க்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் அருகே தேக்காமூரில் சுமார் நூற்றுக்கு மேற்பட்ட பட்டியலினத்தை சேர்ந்த குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் கூலி வேலையை மட்டுமே தங்களது தொழிலாக நம்பி வாழ்ந்து வருகின்றனர்.
2015 ஆம் ஆண்டு திரௌபதி அம்மன் கோயில் அருகே இருந்த அரசு புறம்போக்கு நிலத்தில் தீண்டாமை சுவர் எழுப்பப்பட்டது. இந்த சுவர் மாற்று சமூகத்தினரால் கட்டப்பட்டுள்ளது. இந்த சுவரால் பட்டியலின மக்கள் தங்களது கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்லவோ அல்லது கூலி வேலைக்கு அந்த வழியாக செல்லவோ இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனை அடுத்து பட்டியல் இன மக்கள், அப்பகுதியை சேர்ந்த பல்வேறு தரப்பினரும் இந்த தீண்டாமை சுவரை இடித்து அகற்றுமாறு அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்த நிலையில், இன்று காலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 5 ஜேசிபி எந்திரங்கள் கொண்டு அந்த சுவர் தகர்க்கப்பட்டது.
மாவட்ட ஆட்சியர் ஆல்வி ஜான் வர்கீஸ் உத்தரவிட்டதை அடுத்து இந்த சுவர் அகற்றப்பட்டுள்ள நிலையில், அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக அப்பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 150-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…
திருப்பதி : இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1…
மதுரை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதிலும்…