முள்ளிவாய்க்கால் ஸ்தூபி இடிப்பு… போராட்டத்தை அறிவித்த வைகோ..!
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் ஸ்தூபி இடிக்கப்பட்டதற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் இடிக்கபப்ட்டதை தொடர்ந்து சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என வைகோ அறிவித்த்துள்ளார்.
இதுகுறித்து கூறிய வைகோ, லட்சக்கணக்கான ஈழத் தமிழர்களை ஈவு இரக்கமின்றி கொன்று குவித்து இனப்படுகொலை செய்து சிங்கள அரசு, படுகொலையின் அடையாளங்கள் கூட இருக்கக் கூடாது என்பதற்காக மாவீரர் துயிலகங்களை இடித்தது. இப்போது யாழ் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை இடித்துள்ளது. இது கொடுமையிலும் கொடுமையாகும். எனவே வருகின்ற 11-ஆம் தேதி சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகம் முற்றுகை போராட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளார்.
இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரில் உயிரிழந்த தமிழ் இன மக்கள் கொத்து கொத்தாக கொல்லப்பட்டதை நினைவுகூரும் வகையில் கடந்த 2019-ம் ஆண்டு யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் ஸ்தூபி அமைக்கப்பட்டது. நேற்று இரவோடு இரவாக முள்ளிவாய்க்கால் ஸ்தூபி இடிக்கப்பட்டது.