முள்ளிவாய்க்கால் தூண் இடிக்கப்பட்டதுக்கு தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரில் உயிரிழந்த தமிழ் இன மக்களை நினைவுகூரும் வகையில் கடந்த 2019-ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் தூண் அமைக்கப்பட்டது. ஆனால் நேற்று இரவோடு இரவாக முள்ளிவாய்க்கால் தூண் புல்டோசர் மூலம் அதிகாரிகள் இடித்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில், முள்ளிவாய்க்கால் தூண் இடிக்கப்பட்டதுக்கு தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், இலங்கை அரசு, இரவோடு இரவாக முள்ளிவாய்க்கால் நினைவு தூணை பொக்லைன் இயந்திரம் மூலம் இடிக்கப்பட்ட நிகழ்வு கடும் கண்டனத்திற்குரியது. இச்சம்பவத்திற்கு மத்திய மாநில அரசுகள் உடனடியாக கடும் கண்டனம் தெரிவிக்கவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…