இலங்கையில் ஜனநாயகப் படுகொலை நடைபெற்றுள்ளது …! அன்புமணி ராமதாஸ்
இலங்கையில் ஜனநாயகப் படுகொலை நடைபெற்றுள்ளது என்று பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறுகையில், இலங்கையில் ஜனநாயகப் படுகொலை நடைபெற்றுள்ளது. அதில் இந்தியா தலையிட வேண்டும் .இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது, அந்நாட்டின் உள் விவகாரம் என்றாலும், அதில் இந்தியாவின் பாதுகாப்பும், ஈழத்தமிழர் நலன்களும் அடங்கியிருப்பதால், இந்த விவகாரத்தில் சம்பந்தமில்லை எனக் கூறி, இந்திய அரசு கடந்து செல்ல முடியாது. இந்த விஷயத்தில், இந்தியா இனியும் அலட்சியம் காட்டாமல், உடனடியாகத் தலையிட்டு ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.