தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.
ராகுல்காந்தியின் ராஜதந்திர மற்றும் மதிநுட்ப நடவடிக்கையாலும், உச்சநீதிமன்றத்தின் நியாயமான தலையீடு மற்றும் தீர்ப்பாலும் ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் மத்திய அரசின் ஜனநாயக படுகொலைக்கு உட்படுத்தப்பட்டிருந்த இந்திய ஜனநாயகத்தின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது.
கர்நாடக சட்டமன்றத்தில் நீதியும், ஜனநாயகமும் வென்றுள்ளது. உச்சநீதிமன்றம் தன் தனித்தன்மையையும், பெருமையையும் காப்பாற்றி மக்களிடம் மீண்டும் நம்பிக்கையைப் பெற்றுள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் வாழ்த்துக்கும், பாராட்டுக்கும் உரியவர்கள்.
மத்திய அரசின் கைப்பாவைகளாக செயல்படும் கவர்னர்களுக்கு சரியான பாடம்படிப்பினை இது. ஜனநாயகமும், சட்டமும், தர்மமும் வென்றது மகிழ்ச்சிக்குரியது. ராகுல்காந்திக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதோடு, கர்நாடக மாநிலத்தில் புதிதாக அமையவுள்ள ஆட்சிக்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…
திருவண்ணாமலை -தமிழ் மாதங்களில் எட்டாவது மாதமாக வரக்கூடியது தான் கார்த்திகை மாதம் .இந்த கார்த்திகை மாதத்தில் அனைவரும் வீடுகளில் விளக்கேற்றி…
டெல்லி : ஐபிஎல் போட்டிகளில் இந்தியாவின் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ் சிங் வீரராக விளையாடவில்லை என்றாலும் அணிக்குப் பயிற்சியாளராக வருவாரா?…
ஜார்க்கண்ட் : காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டின் (ஏடிசி) அனுமதி…
சென்னை -திருக்கார்த்திகை ஸ்பெஷல் அப்பம் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; வெல்லம் =முக்கால்…
சென்னை : சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான நிலையில், வெளியாகி 15 நாட்களைக் கடந்து…