ஜவாஹிருல்லா அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளின் போது தமிழக முதல்வர் அவர்களே களத்தில் இறங்கி செயல்பட்டார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரத்தொகை வழங்கப்படும் என முதல்வர் அவர்கள் அறிவித்துள்ளார். மனிதநேய மக்கள் கட்சி சார்பாக, முதல்வரின் நிவராண நிதிக்கு ரூ.10 லட்சம் வழங்கியுள்ளோம்.
பாஜக ஆட்சியில் இருக்கும் போதெல்லாம், பல்வேறு வகையான பாதுகாப்பு விஷயத்தில் கோட்டை விட்டுள்ளார்கள். தற்போது நாடாளுமன்றத்திற்கு இருவர் அத்துமீறி நுழைந்துள்ளனர். பிரதமர் மோடி அவர்கள் புதிய நாடாளுமன்ற கட்டிடம் பாதுகாப்பு வசதியுடன் கட்டப்பட்டது என சொல்லி வந்தார்.
ஆனால், எந்தவிதமான பாதுகாப்பு வசதியும் புதிய நாடாளுமன்றத்தில் இல்லை என்பதற்கு இந்த சம்பவம் எடுத்துக்காட்டாகும். நாட்டு மக்களுக்கே பாதுகாப்பு தருவதற்கு பாஜக தலைமையிலான அரசு தகுதியில்லை, திறமையில்லை, திராணியில்லை என்பதற்கு இந்த சம்பவம் எடுத்துக்காட்டு.
நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு குறைவு ஏற்பட்டதை குறித்து உள்துறை அமைச்சர் விளக்கமளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்டம் நடத்தினார்கள். இதற்காக அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்கள். ஆனால், ஜனநாயகம் பாஜக ஆட்சியில் வேகமாக இறந்து வருகிறது என்பதற்கு எடுத்துக்காட்டாக, 14 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…