ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் இணைந்ததே ஜனநாயகம் – ஸ்டாலின் ..!

Default Image

ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் இணைந்ததே ஜனநாயகம். அத்தகைய ஜனநாயகம் காப்போம் என ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

தமிழகசட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 159 தொகுதிகளைக் கைப்பற்றி, தனி பெரும்பான்மையுடன் மு.க ஸ்டாலின் முதல்வர் பொறுப்பேற்கவுள்ளார். திமுகவின் வெற்றிக்கு பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், முதல்வராக பொறுப்பேற்கவுள்ள திமுக முக ஸ்டாலினுக்கு, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்து இருந்தார். இதைத்தொடர்ந்து, மு.க ஸ்டாலின் தனது ட்விட்டரில் மாண்புமிகு எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மிகச் சிறந்த தமிழகத்தை உருவாக்க தங்களது ஆலோசனையும் ஒத்துழைப்பும் தேவை! ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் இணைந்ததே ஜனநாயகம். அத்தகைய ஜனநாயகம் காப்போம் என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்