கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து பிரதமர் மோடி, அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழுத் தலைவர்களுடன் காணொளி மூலமாக ஆலோசனை கூட்டம் நடத்தினார். இந்த நிலையில் பிரதமருடனான ஆலோசனை கூட்டம் முடிந்த பின்னர் திமுக எம்.பி.யும், கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமடைந்து வரும் சூழலில் புதிய நாடாளுமன்றம் தேவையா? என பிரதமரிடம் கேட்டேன் என தெரிவித்தார். இதையடுத்து மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறை, உள்ளிட்டோர் மக்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா தடுப்புப் பணிக்கு மத்திய அரசு ஒதுக்கியுள்ள நிதி போதாது என்று கூறியுள்ளேன் என குறிப்பிட்டார்.
மேலும் பிரதமர் மோடியிடம், பல்வேறு கோரிக்கைகள் வைத்துளேன் என டி.ஆர்.பாலு தெரிவித்தார். அதில் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு உதவித் தொகையாக ரூ.10,000 வழங்க வேண்டும். நடுத்தர குடும்பத்தினர் எரிவாயு பெற ரூ.5,000 மானியம் வழங்க வேண்டும். ஈரானில் உள்ள தமிழக மீனவர்களை மீண்டும் தமிழகத்திற்கு அழைத்துவர பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளேன். பின்னர் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் கருத்து வேறுபாடுகளை மறந்து மத்திய, மாநில அரசுகள் பணியாற்ற வேண்டும் போன்ற கோரிக்கைகளை பிரதமரிடம் தெரிவித்தேன். இதுகுறித்து பிரதமர் மோடி நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.
லக்னோ : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை…
வாஷிங்டன் : ஏப்ரல் 4, 2025 அன்று, சீனா அமெரிக்க பொருட்களுக்கு 34% கூடுதல் சுங்கவரியை அறிவித்து, ட்ரம்பின் சுங்கவரி…
சென்னை : தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று…
சென்னை : இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகிறது.…
டெல்லி : மாநிலங்களவையில் வக்பு திருத்த சட்ட மசோதா குறித்த விவாதம் மற்றும் மீனவர்கள் பிரச்சினைகள் பற்றி விவாதம் நடைபெற்று…
லக்னோ : நேற்று லக்னோ அணிக்கு எதிராக நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா…