பாதுகாக்கப்படும் டெல்டா அறிவித்த முதல்வர்க்கு பல்வேறு தரப்பில் வரவேற்பு..!

Default Image

டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்த முதல்வர் பழனிசாமிக்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்

இன்று சேலத்தில் நடைபெற்ற பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்த தமிழக முதல்வர் முதலில் சேலத்தில் வாழப்பாடியில் உள்ள காட்டுவேப்பேரிபட்டியில் புதிய அமைக்கப்பட்ட கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைத்தார்.இதன்பின் அம்மாவட்டத்தில் கால்நடை ஆராய்ச்சி பூங்காவிற்கு அடிக்கல் நாட்டினார் இந்த நிகழ்ச்சியில் துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம்,அமைச்சர்கள் உடன் கலந்து பங்கேற்றனர்.

இந்நிலையில் இவ்விழாவில் முதலமைச்சர் பழனிசாமி பேசுகையில் காவிரி டெல்டா பகுதிகள் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அமைக்கப்படும் என்று அதிரடியாக அறிவித்தார்.

இது குறித்து அவர் பேசியவை: விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டும், தமிழகத்தில் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், கரூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களின் டெல்டா பகுதிகள் “பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக” அறிவிக்கப்படுகிறது.இதற்காகவே ஒரு தனிச்சட்டம் கொண்டுவரப்படும்.என்று தெரிவித்த அவர் தமிழகத்தில்  ஹைட்ரோ கார்பனுக்கு அனுமதி இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

முதலமைச்சரின் அறிவிப்பு பல்வேறு தரப்பில் இருந்து வரவேற்ப்பை பெற்று உள்ளது. அதன்படி பாமக நிறுவனர் ராமதாஸ் முதல்வரின் அறிவிப்பு  குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்து ட்விட் செய்துள்ளார்.

 

பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தெரிவித்து  வரவேற்பு  இதுகுறித்து கூறியவை:மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பின் நீண்ட நாள்கள் வலியுறுத்தப்பட்டது, போராடும் மக்கள் பத்தாண்டுகளாக முன்வைத்து வருகின்ற கோரிக்கையை ஏற்று இத்தைகைய அறிவிப்பை வெளியிட்ட தமிழக முதல்வருக்கு வாழ்த்துக்களையும் நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறோம் அதே போல் அறிவித்த அறிவிப்பை செயல்படுத்தும் முதல் செயல்பாடாக மீத்தேன் மற்றும் ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு எதிராக போராடிய மக்கள் மீது பதியப்பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்பப்பெற கோருகிறோம் என தெரிவித்து உடன் கோரிக்கையும் வைத்து உள்ளது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்