ரூ.78.67 கோடி மதிப்பீட்டில் டெல்டா குறுவை சாகுபடி திட்டம் – தமிழக அரசு!

Published by
அகில் R

தமிழகம்: மேட்டூர் அணையில் திட்டமிட்டபடி தண்ணீர் திறக்கப்படாததால் ரூ.78.67 கோடி மதிப்பில் டெல்டா குறுவை சாகுபடிக்கு சிறப்பு தொகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் 12- ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து  குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கமாகும்.  ஆனால், தொடர்ச்சியாக கடந்த 2 ஆண்டுகளாக கர்நாடக அரசு தமிழகத்துக்கு தண்ணீரை வழங்க மறுத்து வருகிறது.  இதன் விளைவால் டெல்டாவில் குறுவை சாகுபடியும்,  சம்பா சாகுபடியும் கடுமையாக பாதிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் 12-ம் தேதி குறுவை சாகுபடிக்கு தமிழ்நாடு அரசு தான் தண்ணீர் திறந்து விட்டது. இருப்பினும், கர்நாடக அரசு தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க மறுத்ததால் மேட்டூரில் தண்ணீர் குறைந்து சாகுபடி செய்யப்பட்டிருந்த பயிர்களும் கருகி நாசமாகின. மேலும்,  இந்த ஆண்டும் மேட்டூரில் இருந்து தமிழகத்திற்கு  தண்ணீர் திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ரூ.78.67 கோடி மதிப்பில் டெல்டா குறுவை சாகுபடிக்கு சிறப்பு தொகுப்பு தமிழக அரசால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.  ஒரு ஏக்கருக்கு ரூ.4,000 வீதம் ஒரு லட்சம் ஏக்கருக்கு உண்டான நிதி வழங்கப்படும் என வேளாண் துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக வேளாண் துறை அமைச்சரான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தனது க்ஸ் தளத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், “வேளாண் உற்பத்தியை பெருக்கி உழவர்களின் நல்வாழ்வில் வளமை ஏற்படுத்திட பல முன்னோக்கு திட்டங்களை கடந்த மூன்றாண்டுகளில் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.  தமிழ்நாட்டில்,  உணவு உற்பத்தியை பெருக்கவும்,  உழவர் பெருமக்களின் வருமானத்தை அதிகமாக ஈட்டவும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் தொலைநோக்குத் திட்டங்களை இவ்வரசு அறிவித்து செயல்படுத்தி வருகிறது.

பருவ மழைகளால் நிரம்பப் பெறும் மேட்டூர் அணை நீர்,  தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாகிய காவேரி டெல்டா மாவட்டங்களில் குறுவை பயிர் சாகுபடிக்காக ஜுன் 12ஆம் நாள் திறந்து விடப்படுவது மரபு.  எதிர்பாராத சூழ்நிலைகளால் பருவமழை காலந்தாழ்த்தி இருப்பதால் இந்த ஆண்டு 2024 மேட்டூர் அணையில் போதிய நீர் இல்லாததால்,  டெல்டா சாகுபடிக்கு நீரை திறந்து விட கால தாமதம் ஏற்பட்டு உள்ளது.

டெல்டா விவசாயிகளை காக்கும் விதமாக ரூ.78.67 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குறுவை சாகுபடி தொகுப்பை உழவர் நலன் கருதி கீழ்க்கண்டவாறு வழங்கி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.  1,00,000 லட்சம் ஏக்கர் பரப்பளவிற்கு, 2,000 மெட்ரிக் டன் நெல் விதைகள் மானிய விலையில் ரூ.3.85 கோடி மதிப்பில் வேளாண் விரிவாக்க மையங்கள் மூலம் வழங்கப்படும்.  நெற்பயிர் இயந்திர நடவு பின்னேற்பு மானியமாக ஏக்கர் ஒன்றிற்கு ரூ.4 ஆயிரம் வீதம், 1 லட்சம் ஏக்கர் பரப்பளவிற்கு தமிழ்நாடு அரசு ரூ.40 கோடி நிதி வழங்கப்படும்.

நுண்ணூட்டச் சத்து குறைபாடுள்ள 7,500 ஏக்கர் பரப்பளவில், நெல் நுண்ணூட்டக் கலவை 50 சதவீத மானியத்தில் விநியோகிக்க ரூ.15 லட்சம் வழங்கப்படும்.  அதோடு,  துத்தநாக சத்து குறைபாடு உள்ள இடங்களில்,  துத்தநாக சல்பேட் உரத்தை பயன்படுத்துவதற்கு, ஏக்கருக்கு 250 ருபாய் வீதம்,  25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவுக்கு, 62 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயும், 25 ஆயிரம் ஏக்கரில் ஜிப்சம் பயன்படுத்துவதற்காக ஏக்கருக்கு மானியமாக 250 ரூபாய் வீதம் 62 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும்.

பயறு வகைப் பயிர்களை 10,000 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்வதற்கு, 50 சதவீத மானியத்தில் தரமான விதைகள், சூடோமோனாஸ், திரவ உயிர் உரங்கள் மற்றும் இலை வழி உரம் தெளிக்கவும்,   ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் நிதியும், பயறுவகைப் பயிர்களில் மகசூல் திறனை அதிகரிக்க 50 சதவீத மானியத்தில் 10,000 ஏக்கருக்கு நுண்ணூட்டச்சத்து வழங்கிட ரூ.20 லட்சம் நிதியும் வழங்கப்படும்.

வேளாண்மை பொறியியல் துறை மூலம் விசை உழுவை, களையெடுக்கும் கருவி, விதை மற்றும் உரமிடும் கருவி, இயந்திரக் கலப்பை, சுழற் கலப்பை, சாகுபடிக் கலப்பை, பலதானியப் பிரித்தெடுக்கும் கருவி. ஆளில்லா வானூர்திக் கருவி மற்றும் சூரிய சக்தியால் இயங்கும் பம்ப்செட் போன்ற 442 கருவிகள் வழங்கிட மானியமாக ரூ.7 கோடியே 52 லட்சம் நிதி வழங்கப்படும்.

டெல்டா மாவட்டங்களில் வேளாண்பணியில் ஈடுபடுவோருக்கு ஏற்பட்டுள்ள வேலைவாய்ப்பு இழப்பினை ஈடுசெய்யும் பொருட்டு மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்புகளை வழங்க 24 கோடியே 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.  மேற்கண்டவாறு, அரசு நிதியிலிருந்து நிதி பெற்றும், பல்வேறு திட்டங்களை ஒருங்கிணைத்தும், ரூ.78.67 கோடி மதிப்பீட்டில், குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தினை செயல்படுத்திட தமிழ்நாடு முதலமைச்சர்  உத்தரவிட்டுள்ளார்.”என்று அந்த அறிக்கையில் அவர் தெரிவித்திருக்கிறார்.

Recent Posts

நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – ரிக்டரில் 7.1 ஆக பதிவு

நேபாளம் : நேபாளத்தில் லாபுசே நகரில் இன்று ஜனவரி 7, 2025 அன்று நிலநடுக்கம் ஏற்பட்டது.  ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக…

20 minutes ago

நான் பதவி விலக உள்ளேன் – கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவிப்பு!

ஒட்டாவோ : கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, லிபரல் கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக வேதனையுடன் அறிவித்துள்ளார்.…

51 minutes ago

சென்னையில் HMPV வைரஸ் : முகக்கவசம் அணிய வேண்டும்! – தமிழக அரசு அறிவுறுத்தல்!

சென்னை : சீனாவில் பாதிக்கும் HMPV தொற்றானது, இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஏற்கனவே, கர்நாடகா மாநிலம் பெங்களூருவில்…

1 hour ago

தமிழ்நாட்டில் அத்துமீறும் ஆளுநரை கண்டித்து திமுக சார்பில் இன்று போராட்டம்! ஆர்எஸ்பாரதி அறிவிப்பு!

 இந்த வருடத்திற்கான முதல் தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் நேற்று நடைபெற்ற நிலையில்,  ஆளுநர் கலந்துகொண்டு உரையாற்றுவார் என கூறப்பட்டது. ஆனால்,…

2 hours ago

யாரு கேட்டது ரூ.5 கோடி? சந்திரமுகி பட காட்சி விவகாரம்., நயன்தாரா தரப்பு விளக்கம்!

சென்னை : தென்னிந்திய சினிமாவில் உச்ச நடிகையாக உள்ள நயன்தரா - இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த 2022ஆம்…

10 hours ago

அமெரிக்காவில் இந்தியர் சுட்டுக்கொலை! 5 இந்திய வம்சாவளியினர் அதிரடி கைது!

நியூ யார்க் : குல்தீப் குமார் எனும் 35 வயது மதிக்கத்தக்க நபர் அமெரிக்காவில் பணியாற்றி வந்துள்ளார். இவர் கடந்த…

11 hours ago