டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, இதுதொடர்பான சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க தமிழக முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை இன்று மாலை கூடுகிறது. காவிரி டெல்டா பகுதிகளில், குறிப்பாக காவிரிப் படுகையில் மீத்தேன், ஹைட்ரோகார்பன் மற்றும் எண்ணெய் வளங்களை எடுப்பதற்கான திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் நிலவளம், நிலத்தடிநீர் வளம் மற்றும் சுகாதார பாதிப்பு ஏற்படுவதாக கூறி அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதற்கு தமிழக அரசு சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று, கடந்த பிப்.9-ம் தேதி சேலம் தலைவாசலில் நடைபெற்ற கால்நடைப் பூங்கா அடிக்கல் நாட்டு விழாவில், காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக முதல்வர் பழனிசாமி அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு உயிர் கொடுக்கும் வகையில், இந்த சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கும் வகையில், இன்று மாலை 4.30 மணிக்கு தமிழக தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக்கூட்டத்தில் டெல்டாவை வேளாண்மண்டலமாக அறிவித்தது தொடர்பான விதிமுறைகளுக்கு ஒப்புதல் பெறப்படும் என்று தெரிகிறது.
சென்னை : பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு அதிகாலை திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து, சென்னை அப்போலோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவசர சிகிச்சை…
சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…
டெல்லி : ஐபிஎல் 2025 சீசன் இன்னும் ஒரு வாரத்திற்குள் தொடங்கவுள்ள நிலையில், வரப்போகும் இரண்டு மாத கால கிரிக்கெட்…
சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஜூன் மாதம் முதல் சர்வதேச…