டெல்டா மாவட்டங்களுக்கு அதிக கனமழைக்கு வாய்ப்பு! அலர்ட் கொடுத்த வெதர் மேன்!

நாகப்பட்டினம், காரைக்கால், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வெதர்மேன் ஹேமச்சந்தர் தகவலை தெரிவித்துள்ளார்.

heavy rain

சென்னை : நேற்று தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (11-12-2024) காலை 830 மணி அளவில் இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில், இலங்கை தமிழக கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்து இருந்தார்.

இந்த சூழலில், வடஇலங்கை மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு வங்ககடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த சில மணி நேரங்களில் தெற்கு டெல்டாவின் கடல் பகுதி நோக்கி நகரக்கூடும் என்பதால் டெல்டா  மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வெதர்மேன் ஹேமச்சந்தர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் கூறியதாவது ” வடகடலோர மாவட்டங்கள் & டெல்டா மாவட்டங்களில் பரவலாக மிதமானது முதல் சற்றே கனமழை பெய்து வருகிறது. சலனம் டெல்டாவின் கடலோர பகுதி நோக்கி நகர்ந்த பிறகு மழையின் தீவிரம் அதிகரிக்க கூடும். குறிப்பாக இன்று (டிசம் 11ம் தேதி) இரவு 7 மணி முதல் நாளை (டிசம் 12ம் தேதி) இரவு 7 மணி வரையிலான 24 மணி நேரத்தில் மழை தீவிரமடையும்.

டெல்டா மாவட்டங்களான நாகப்பட்டினம், காரைக்கால், மயிலாடுதுறை, திருவாரூர் , தஞ்சாவூர் மாவட்டங்களில் பரவலாக கன முதல் மிககனமழையும், ஒருசில இடங்களில் அதித கனமழையும் பதிவாகும். வடகடலோர மாவட்டங்கள் & உள்மாவட்டங்களிலும் மழையின் தாக்கம் அதிகரிக்ககூடும்” எனவும் ஹேமச்சந்தர் தன்னுடைய பதிவில் வானிலை தொடர்பான தகவலை தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்