#FarmerProtest:போராட்டக்காரர்களால் தாக்கப்பட்டதில் 300 போலீசார் காயம்-டெல்லி காவல்துறை
டெல்லியில் நேற்று நடைபெற்ற விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் வன்முறை சம்பவம் நடைபெற்றது.இதில் விவசாய சட்டங்களை எதிர்த்து போராடிய விவசாயிகளுக்கும் போலீஸ் மற்றும் பாதுகாப்பு படையினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
இந்த வன்முறையில் 300 போலீசார் காயமடைந்ததாகவும், வன்முறையில் ஈடுபட்டவர்களால் பல பொது மற்றும் தனியார் சொத்துக்கள் சேதமடைந்ததாகவும் டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பல்வேறு சம்பவங்கள் தொடர்பாக, சட்டபூர்வமான வழிமுறைகளை மீறுதல், கலவரம், பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் மற்றும் கொடிய ஆயுதங்களுடன் அரசு ஊழியர் மீது தாக்குதல் தொடர்பாக 20 முதல் தகவல் அறிக்கை ( எஃப்.ஐ.ஆர்.) தாக்கல் செய்யப்பட்டுள்ளது.