பார்வையாளர்கள் போன்று டெல்லி போலீசார்.. மத்திய அமைச்சருக்கு கனிமொழி எம்பி கடிதம்!

Default Image

ABVP அமைப்பினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மத்திய கல்வி அமைச்சருக்கு கனிமொழி எம்.பி. கடிதம்.

ABVP அமைப்பினர் தாக்குதல்:

jnudelhi

டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தில் சத்ரபதி சிவாஜி பிறந்தாநாள் விழா கடந்த இரு தினங்களுக்கு முன்பு கொண்டாடப்பட்டது. அப்போது, ஏபிவிபி பிரிவு மாணவர்கள் மற்றும் இடதுசாரி மாணவர்கள் ஒரே இடத்தில் கூடியதால் அங்கு மாணவர்களிடையே தாக்குதல் சம்பவம் நடைபெற்றது. இதில், இடதுசாரி மாணவர்கள் மற்றும் தமிழ்நாடு மாணவர்கள் மீது ABVP அமைப்பினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அரசியல் தலைவர்கள் கண்டனம்:

சத்ரபதி சிவாஜியின் புகைப்படம் தரையில் வைக்கப்பட்டிருந்ததாக கூறி ஏபிவிபி அமைப்பினர் தமிழ்நாட்டு மாணவர்களிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. தமிழ்நாடு மாணவர்கள் தாக்குதலுக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனங்களை தெரிவித்தோடு, ABVP அமைப்பினர் மீது மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். ஏபிவிபி மாணவர்கள் பெரியார், கார்ல்மாக்ஸ் புகைப்படங்களை சேதப்படுத்தியது ஏற்புடையதல்ல என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

கனிமொழி எம்பி கடிதம்:

kanimolimp22

இந்த நிலையில், டெல்லி ஜே.என்.யூ பல்கலைக்கழக்கத்தில் தமிழ்நாடு மாணவர்களை தாக்கிய ஏ.பி.வி.பி அமைப்பினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கனிமொழி எம்பி, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்தர் பிரதானுக்கு திமுக எம்பி கனிமொழி கடிதம் எழுதியுள்ளார். அதில், தமிழ்நாட்டு மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதுடன் பெரியார், கார்ல்மாக்ஸ் படங்களை சேதப்படுத்தியுள்ளனர். வன்முறையை தடுக்க தவறியதுடன் பார்வையாளர்கள் போன்று டெல்லி போலீசார் இருந்ததாக குற்றசாட்டியுள்ளார். தமிழ்நாட்டு மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்