Jaffer Sadiq – டெல்லியில், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினர் நடத்திய சோதனையில் 50 கிலோ அளவுக்கு போதைப்பொருள் சிக்கியது. இந்த போதை பொருள் கடத்தல் வழக்கில் முதற்கட்டமாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் சென்னை மைலாப்பூரை சேர்ந்த ஜாபர் சாதிக் என்பவர் இதற்கு மூளையாக செயல்பட்டது தெரியவந்தது.
ஜாபர் சாதிக், முன்னாள் திமுக பிரமுகரகாவும், திரைப்பட தயாரிப்பாளராகவும், தொழிலதிபராகவும் இருந்துள்ளார். அவருக்கு துணையாக அவரது சகோதரர்கள் இருந்ததும், இந்த கடத்தல் கடந்த 3 வருடங்களாக நடைபெற்று வந்ததும் தெரியவந்தது. தகவல் அறிந்து கைது செய்யப்படுவதற்கு முன்னர், ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதரர்கள் குடும்பத்துடன் தலைமறைவாகிவிட்டனர்.
இதனை அடுத்து தீவிர தேடுதல் வேட்டைக்கு பின்னர் இன்று ஜாபர் சாதிக்கை டெல்லி போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட பின்னர் தற்போது டெல்லி போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு துணை இயக்குனர் ஞானேஸ்வர் செய்தியாளர்களிடம் பல்வேறு தகவல்களை குறிப்பிட்டார்.
அவர் கூறுகையில், ஜாபர் சாதிக் கடந்த 3 வருடங்கலாக போதைப்பொருள் மெத்தபெட்டமைன் மூலப்பொருளான சூடோபெட்ரைன் எனும் போதை பொருளை கடத்தி வந்துள்ளார். 1 கிலோவுக்கு 1 லட்சம் ரூபாய் வீதம் ஜாபருக்கு லாபம் கிடைத்துள்ளது. இதுவரை 3500 கிலோ போதை பொருளை கடத்தியுள்ளார்.
ஜாபருக்கு பல்வேறு சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருந்துள்ளது. இதன் மூலம் கிடைத்த வருமானத்தை திரைத்துறை, ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முதலீடு செய்துள்ளார்.
ஜாபர் சாதிக் மீது 2019ல் மும்பை சுங்கத்துறையில் போதை பொருள் கடத்தல் வழக்கு பதியப்பட்டுள்ளது. பிரபல பெரும் புள்ளிகளோடு அவருக்கு தொடர்புள்ளது. அரசியல் கட்சிகளுக்கு நிதியுதவி அளித்தாரா என்பது பற்றி தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
உணவுப் பொருள் என்கிற பெயரில் ஆஸ்திரேலியா, மலேசியா, நியூசிலாந்து உள்ளிட்ட சர்வதேச நாடுகளுக்கு போதைப் பொருட்களை ஜாபர் சாதிக் கடத்தியுள்ளார். ஜாபர் சாதிக்குடன் தொடர்பில் இருந்தவர்களிடம் விரைவில் விசாரணை நடத்தப்படும். ஜாபர் சாதிக் உடன் தொடர்பில் இருந்த திரை பிரபலங்கள் பெயர் கிடைத்துள்ளது. தலைமறைவாக இருந்த ஜாபர் திருவனந்தபுரம், மும்பை , ஜெய்ப்பூர், டெல்லி ஆகிய பல்வேறு ஊர்களுக்கு சுற்றிதிரிந்துள்ளார். பின்னர் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கைது செய்யப்பட்டு டெல்லி அழைத்துவரப்பட்டுள்ளார் என டெல்லி போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினர் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.
சென்னை : சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை சிவாஜி நினைவிடம் அருகே, திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் "திராவிடமே…
சென்னை : கடந்த மாதம் 27-ல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெக கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. தவெக வெற்றிக்…
கோவை : முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று காலமானார். திருப்பதியில்…
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…
ஐரோப்பா : மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் பயன்படுத்திய பொருட்கள் பிரமாண்ட விலைக்கு ஏலத்தில்…
சென்னை : நடிகர் சூர்யாவின் “கங்குவா” படத்தை வெளியிடத் தடையில்லை என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரூ.55 கோடி ரூபாயை வழங்காமல்…