தமிழகத்தை நம்பியே டெல்லி உள்ளது- கமல்ஹாசன்
தமிழகம் போல எந்த மாநிலமும் வரி செலுத்துவதில்லை என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சாத்தூரில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் பிரசாரம் மேற்கொண்டார்.அப்போது அவர் பேசுகையில், தமிழகத்தை நம்பியே டெல்லி உள்ளது. தமிழகம் போல எந்த மாநிலமும் வரி செலுத்துவதில்லை .கல்வியில் சிறந்த மாவட்டமான விருதுநகரில் இதுவரை மருத்துவக் கல்லூரியை கொண்டுவரவில்லை. திமுக, அதிமுக ஆகிய 2 கழகங்களும் அகற்றப்பட வேண்டும்.ஆபத்து இல்லாமலும், மாசு இல்லாமலும் பட்டாசு தயாரிக்கும் முறை, வல்லுநர்களின் வழிகாட்டுதலுடன் கொண்டுவரப்படும் என்று பேசினார்.