துக்ளக் குருமூர்த்தி நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய டெல்லி உயர்நீதிமன்றம் ஆணை.
டெல்லி உயர்நீதிமன்றம் வழக்கறிஞர்கள் சங்கம் தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் துக்ளக் குருமூர்த்தி நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2018ம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த முரளிதரருக்கு எதிராக குருமூர்த்தி பதிவிட்டிருந்ததாக கூறப்பட்டது. பின்னர் இந்த பதிவும் நீக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர்கள் சங்கம் கிரிமினல் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.
இதுதொடர்பாக துக்ளக் குருமூர்த்தி ஏற்கனவே மன்னிப்பு கோரியுள்ளார், தனது பதிவையும் நீக்கிவிட்டார் என அவர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் இன்று வாதிட்ட நிலையில், குருமூர்த்தி நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னை : வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை 5:30 மணி நிலவரப்படி புயல் சின்னம்…
சென்னை : வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது நாகையில் இருந்து 470 கிமீ தென் கிழக்கிலும் சென்னையில் இருந்து…
சென்னை : கனமழை முன்னெச்சரிக்கையாக தமிழகத்தின் பல பல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அதன்படி, மாற்று தேர்வுகளுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்…
சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், 8 கி.மீ. வேகத்தில் நகர்ந்த…
சென்னை: வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வேகமாக நகர்ந்து வருகிறது. இது தொடர்ந்து வடக்கு - வடமேற்கு…
சென்னை : வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வேகமாக நகர்ந்து வருகிறது. கரையை நோக்கி மணிக்கு 10…