டெல்லியில் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபாவை தமிழ்நாட்டுக்கு அழைத்துவர டெல்லி நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் செயல்படும் சுசில் ஹரி பள்ளி நிறுவனர் சிவ சங்கர் பாபா மீது அப்பள்ளியின் முன்னாள் மாணவிகள் சமூக வலைதளத்தில் பாலியல் புகார் தெரிவித்ததை தொடர்ந்து, மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தில் நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியது.
ஆனால், சிவசங்கர் பாபா ஆஜராகவில்லை. இதனைத் தொடர்ந்து, சிவசங்கர் பாபா மீது போக்சோ உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர், இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி திரிபாதி உத்தரவிட்டார். சிவசங்கர் பாபா உடல்நலக்குறைவு காரணமாக உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது தெரியவர தமிழ்நாடு சிபிசிஐடி தனிப்படை போலீசார் விசாரணைக்காக உத்தரகண்ட் சென்றனர்.
டேராடூன் மருத்துவமனையில் இருந்த சிவசங்கர் பாபா சிபிசிஐடி வருவதை அறிந்து மருத்துவமனையில் தப்பி ஓடினார். பின்னர், இன்று காலை சிவசங்கர் பாபா டெல்லி காசியாபாத்தில் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபா டெல்லிசாகேத் நீதிமன்றத்தல் ஆஜர்படுத்தி தமிழக்திற்கு அழைத்துச் செல்ல அனுமதி கேட்கப்பட்டது. சிவசங்கர் பாபாவை தமிழகம் அழைத்து செல்ல டெல்லி சாகேத் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
அகமதாபாத் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடர் மற்றும்…
சென்னை : நேற்று (பிப்ரவரி 12) சென்னையில் பாஜக சார்பில் மத்திய பட்ஜெட் 2025 பற்றிய விளக்க கூட்டம் நடைபெற்றது.…
ஈரோடு : கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று கோவையில் அத்திக்கடவு - அவினாசி திட்டத்திற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மூன்று மாவட்ட…
அகமதாபாத் : இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்திய அணி ஏற்கனவே, 2-0 என்ற கணக்கில் கைப்பற்றிவிட்ட நிலையில்,…
சென்னை : இயக்குநர் கெளதம் தினானுரி இயக்கத்தில் உருவாகியுள்ள விஜய் தேவரகொண்டாவின் புதிய படத்திற்கு ‘கிங்டம்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.…
கலிபோர்னியா : சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவரது…