தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 57 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இன்று காலை 7 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், மேலும் 50 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.
இதனால் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 124 ஆக உயர்ந்துள்ளது.இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டதாக கூறப்பட்ட 50 பேரில் 45 பேர் டெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்றவர்கள் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த மாநாட்டில் 1,131 பேரில் 515 பேர் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் கூறினார்.
இந்நிலையில் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் தாமாக முன்வந்து உரிய நேரத்தில் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். சிலரை தொடர்பு கொண்ட நிலையில் பலரை மாவட்ட நிர்வாகத்தினால் தொடர்பு கொள்ள முடியவில்லை.
தொடர்பு கொள்ள முடியாதவர்கள் தாமாக முன்வந்து மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொள்ள வேண்டும் என அரசு கூறியுள்ளது. உரிய நேரத்தில் சிகிச்சை எடுத்துக் கொண்டால் நோய் தொற்று ஏற்படுவதை தடுக்க இயலும்.டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் எனவும் அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள ஒரு பகுதியில், நேற்று ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக…
ததஞ்சாவூர்: தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே நெய்வேலி தென்பதியில் உள்ள ஒரு பட்டாசு குடோனில்ஏற்பட்ட வெடி விபத்தில் 2…
சென்னை : தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்…
டெல்லி : நேற்றைய தினம் மழையால் ஆர்சிபி-க்கு எதிரான போட்டி கைவிடப்பட்ட நிலையில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா அணி பிளே…
ஹைதராபாத் : ஹைதராபாத்தின் சார்மினார் அருகே உள்ள குல்சார் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. திடீரென தீ விபத்து ஏற்பட்டதால்,…
டெல்லி : விராட் கோலி டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, சுரேஷ் ரெய்னா விராட் கோலி குறித்து…