டெல்லியிலிருந்து திருநெல்வேலி வரை செல்லும் சிறப்பு ரயில் இன்று அதிகாலை திருச்சி வந்தது.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதுவரை இந்தியாவில் இந்த வைரஸால், 95,698 பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், வெளி மாநிலங்களுக்கு சென்றவர்களும் மீண்டும் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல இயலாமல் தவித்து வருகின்றனர். தற்போது மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கில் சில தளவுகளை அறிவித்துள்ளது.
இதனையடுத்து, டெல்லியிலிருந்து திருநெல்வேலி வரை செல்லும் சிறப்பு ரயில் இன்று அதிகாலை திருச்சி வந்தது. தமிழகத்தில் இருந்து புலம் பெயர்ந்த 266 பேர், டெல்லியில் நடந்த தப்லீக் மாநாட்டிற்குச் சென்ற 292 பேர் என மொத்தம் 558 பேர் டெல்லியில் இருந்து சிறப்பு ரயில் மூலம் இன்று திருச்சிக்கு அழைத்து வரப்பட்டன.
மேலும், திருச்சியைச் சுற்றி உள்ள புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சை, நாகை, திருவாரூர், மதுரை, தேனி, ஆகிய மாவட்டங்களில் இருந்து 202 பேர் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் இருந்து, ஐந்து சிறப்பு பேருந்துகள் மூலம் அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
புதுச்சேரி : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று (டிசம்பர் 28) புதுச்சேரி நாவற்குளம் நெடுஞ்சாலையில்,…
மெல்போர்ன் : சினிமா படத்தில் வரும் "இங்க வாய்ப்புன்றது நம்முளுக்கு அவ்ளோ சீக்கிரம் கிடைக்கிறது இல்ல இது நம்ப ஆட்டம்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த சம்பவம்…
சென்னை : இன்று நடைபெற்ற பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி…
விழுப்புரம் : இன்று பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி மற்றும் பாமக…
சென்னை: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம்…