உ.பி வன்கொடுமை: நீதி கேட்டு தலைநகரில் கட்சிகள் போராட்டம்! அரசியல் செய்யாதீர்கள் கெஜ்ரி காட்டம்

உ.பி கூட்டு பாலியல் வன்கொடுமை கண்டித்து தலைநகர் டெல்லியில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்தாரஸ் என்ற கிராமத்தில் 19 வயது இளம்பெண் வயலில் வேலை செய்து கொண்டிருந்த போது பலத்காரம் செய்யப்பட்டார்.மிக கொடூரமான முறையில் தாக்கப்பட்ட அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார்.
உயிரிழந்த பெண்ணின் உடலை பெற்றோரிடம் ஒப்படைக்காமல் போலீசாரே எரித்து தகனம் செய்ததால் சர்ச்சை எழுந்தது.இச்சம்பவம் தொடர்பாக 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.நாட்டையே இச்சம்பவம் அதிர்ச்சி அடைய செய்துள்ள நிலையில் பாலியல் வன்கொடுமைக்கு நீதி கேட்டு டெல்லியில் பல்வேறு கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.தலைநகர் டெல்லியில் ஜந்தர் மந்தரில் இடதுசாரி, அமைப்புகள், ஆம் ஆத்மி, பீம் ஆர்மி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.தற்போது இப்போராட்டத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்றுள்ளார்.போராட்டத்தில் பங்கேற்ற கெஜ்ரிவால் ஹத்தாரஸ் பாலியல் வன்கொடுமையை வைத்து அரசியல் செய்யக் கூடாது. நாட்டில் இனி பாலியல் வன்கொடுமைச் சம்பவம் நடக்க கூடாது” என்று டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டத்தில் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
‘அந்த இடத்திற்கு செல்லாததால் தப்பிய தமிழர்கள் 68 பேர்’ – சுற்றுலா சென்ற மதுரை நபர் சொன்ன தகவல்.!
April 23, 2025
பயங்கரவாத தாக்குதலில் தமிழர் சந்துரு சிக்கினாரா.? நடந்தது என்ன? மனைவி கொடுத்த விளக்கம்.!
April 23, 2025