அம்மாவின் பெயரை நீக்கியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது – டிடிவி தினகரன்
முழு உடல் பரிசோதனை மையத்திற்கு நீக்கப்பட்ட அம்மாவின் பெயரை மீண்டும் சூட்டிடவேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தல்.
இதுதொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு அரசு சிறப்பு மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை மையத்திற்கு வைக்கப்பட்டிருந்த புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பெயரை நீக்கியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
தி.மு.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்தே அம்மா அவர்களின் பெயரிலான திட்டங்களை முடக்குவது அல்லது பெயர் மாற்றம் செய்வதை திட்டமிட்டு அரங்கேற்றி வருகிறார்கள். முழு பௌர்ணமி நிலவாக தமிழ்நாட்டு மக்களின் மனங்களில் பிரகாசிக்கும் அம்மா அவர்களின் புகழை இப்படியான அற்பமான செயல்களால் மறைத்துவிட முடியாது என்பதை தி.மு.க. அரசு புரிந்துகொள்ளவேண்டும். முழு உடல் பரிசோதனை மையத்திற்கு நீக்கப்பட்ட அம்மாவின் பெயரை மீண்டும் சூட்டிடவேண்டும் என தெரிவித்துள்ளார்.
சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு அரசு சிறப்பு மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை மையத்திற்கு வைக்கப்பட்டிருந்த புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பெயரை நீக்கியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. (1/3) @CMOTamilnadu
— TTV Dhinakaran (@TTVDhinakaran) April 20, 2022