இமாச்சலப் பிரதேசத்தில் விபத்தில் சிக்கி வெற்றி துரைசாமி மாயமான விவகாரத்தில் அவர் குடும்பத்தாரிடம் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இமாச்சலப் பிரதேசம், சட்லஜ் நதிக்கரையின் அருகே அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி, அவரது நண்பர் கோபிநாத் மற்றும் ஓட்டுநர் டென்சிங் உள்ளிட்ட 3 பேர் காரில் பயணம் செய்தனர்.
அந்த கார் விபத்துக்குள்ளாகி சட்லஜ் நதியில் விழுந்தது. இதில், வெற்றி துரைசாமியுடன் பயணித்த திருப்பூரைச் சேர்ந்த அவரது நண்பர் கோபிநாத் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கார் ஓட்டுநர் டென்சிங் சடலமாக மீட்கப்பட்டார். விபத்தில் சிக்கி மாயமான வெற்றி துரைசாமியை கடந்த 6 நாட்களாக தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது.
இந்நிலையில், போலீசார், ராணுவ வீரர்கள், டைவிங் வீரர்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப்படையினர் என 100க்கும் மேற்பட்டோர் 7 வது நாளாக தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் விபத்து நடந்த இடத்தில் இருந்த ரத்த கறைகள், திசுக்கள் டிஎன்ஏ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. இதை அவரின் குடும்பத்தார் டிஎன்ஏ உடன் ஒப்பிட்டு பார்க்க முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில் வெற்றி துரைசாமியின் குடும்பத்தாரிடம் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
மீண்டும் கோயம்பேட்டிலிருந்து புறப்படும் ஆம்னி பேருந்துகள்: வெளியான அறிவிப்பு
அதன்படி, இன்று மாலை 5 மணிக்கு மேல் டிஎன்ஏ பரிசோதனை செய்ய முடியாது என போலீசாரிடம் சென்னை ராயப்பேட்டை மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்திருக்கின்றனர். இதையடுத்து நாளை காலையில் மருத்துவமனையில் வெற்றி துரைசாமியின் குடும்பத்தினருக்கு டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த பரிசோதனையின் முடிவுகள் நாளை மாலையில் தெரியவரும் என தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…