முகக்கவசங்களுக்கு தட்டுப்பாடு.! உயர்ந்தது விலை.!

Default Image
  • சீனாவில் முகக்கவசங்களுக்கான தேவை அங்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் முகக் கவசங்களின் விலை உயர்ந்துள்ளது. 

சீனாவில் கொவிட்-19 வைரஸின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் உயிரிழப்பின் எண்ணிக்கை உயர்ந்த வண்ணம் உள்ளது. இதனால் முகக்கவசங்களுக்கான தேவை அங்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் முகக் கவசங்களின் விலை உயர்ந்துள்ளது. முகக்கவசம், மருத்துவ பாதுகாப்பு உடைகள், கையுறை உள்ளிட்ட பலவற்றை ஏற்றுமதி செய்யக்கூடாதென கடந்த 1-ம் தேதி மத்திய அரசு உத்தரவிட்டது. ஆனாலும் சீனாவிற்கு நேரடியாக அல்லாமல் மலேசியா, இலங்கை, தாய்லாந்து, சிங்கப்பூர் மற்றும் நேபாளம் உள்ளிட்ட நாடுகள் வழியாக முகக்கவசங்கள் அதிகளவில் ஏற்றுமது செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

இதனால் தமிழகத்தில் முகக்கவசங்களின் விலை உயர்ந்துள்ளது. இந்த நிலையில் ஓரத்துக்கு முகக்கவசம் 4 ரூபாயில் இருந்து 17 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மூன்றடுக்கு முகக்கவசம் 6 லிருந்து 30 வரை விற்கப்படுகிறது. பின்னர் மறுபயன்பாடு செய்துகொள்ள ஏதுவான N95 முகக்கவசம் 130லிருந்து 270 வரை விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் கொவிட்-19 வைரஸ் இல்லையென்று சொன்னாலும் மக்கள் மத்தில் அச்சம் நிலவி வருகிறது. இத்தகையை விலையேற்றத்தை தடுக்க நடவடிக்கை தேவை என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்