பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று தமிழகம் வருகை.!

Defense Minister Chennai

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இன்று பாஜக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் பங்கேற்க தமிழகம் வருகிறார்.

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசின் 9 ஆண்டுகள் சாதனைகளை விளக்கும் வகையில் தமிழகத்தில் பல்வேறு பொதுக்கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன, இதில் பாஜகவின் முக்கிய தலைவர்கள் தலைமையில் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

இந்நிலையில் இன்று ஜூன் 20 ஆம் தேதி சென்னை தாம்பரம் இரும்புலியூரில் உள்ள டி.டி.கே நகர் மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது, பாஜக சார்பில் நடைபெறும் இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இன்று பிற்பகல் 4 மணியளவில் சென்னை வருகிறார்.

இதனை முடித்துக்கொண்டு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை சந்திக்க உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கிறது. ஏற்கனவே கடந்த வாரம் ஜூன் 11 இல் அமித்ஷா சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் பங்கேற்க தமிழ்நாடு வந்திருந்தார், இவரையடுத்து தற்போது பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வரவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்