அவதூறு கருத்து – அதிமுக நிர்வாகி கைது.. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ட்வீட்!

MR Vijayabhaskar

கரூர் மாவட்ட ஐடி பிரிவு துணைத் தலைவர் கைதை தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் குற்றசாட்டு.

சமூக வலைத்தளங்களில் அவதூறு கருத்து பரப்பியதாக கரூர் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை தலைவர் நவலடி கார்த்திக் கைது செய்யப்பட்டார். தூத்துக்குடி விஏஓ லூர்து பிரான்சிஸ் கொலை குறித்து அவதூறு பரப்பியதாக தகவல் வெளியாகியிருந்தது. இதன்பின் அவதூறு கருத்துக்களை பரப்பியதாக நவலடி கார்த்திக்கை கரூர் போலீசார் கைது செய்ததாக கூறப்பட்டது.

மேலும், இவ்விவகாரம் குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், அதிமுக நிர்வாகி கைதை தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைத்து, திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்களில் மதுவகைகளை விநியோகிக்கலாம் என அரசாணை கொண்டு வந்த இந்த கையாலாகாத திமுக அரசின் அவலங்களை சமூக வலைதளங்களில் “மீம்” ஆக பதிவு செய்ததை பொறுக்க முடியாமல் காவல் துறையை ஏவல் துறையாக கொண்டு, இன்று ஐடி பிரிவு துணைத் தலைவர் நவலடி கார்த்திக்கை கைது செய்துள்ளது இந்த விடியா திமுக அரசு.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் வழிகாட்டுதலின் படி, இந்த வழக்கில் இருந்து மீட்பதற்கான அனைத்து சட்ட பூர்வ நடவடிக்கைகளையும் மாவட்டக் கழகம் மேற்கொண்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

today LIVE
ponmudi dmk
mk stalin ABOUT tn
tvk vijay
deepika padukone l & k
Stalin's announcement Prison sentence
game changer shankar