தமிழக அரசியல் தலைவர்கள் மீதான 130 அவதூறு வழக்குகள் ரத்து என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல் கட்சி பிரமுகர்கள் மீது தொடரப்பட்ட அனைத்து அவதூறு வழக்குகளையும் திரும்பப் பெறவும், அதன் மீதான அனைத்து மேல் நடவடிக்கைகளையும் கைவிடவும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில். 2012ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை அவதூறுப் பேச்சுக்களுக்காக, தேசிய முற்போக்குத் திராவிடக் கழகத்தின் தலைவர் விஜய்காந்த் மற்றும் பிரேமலதா விஜயகாந்த், காங்கிரஸ் கட்சியின் E.V.K.S. இளங்கோவன் மற்றும் விஜயதாரணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர், G. ராமகிருஷ்ணன், அரசியல் பிரமுகர்கள் திருவாளர்கள் பழ.கருப்பைய்யா மற்றும் நாஞ்சில் சம்பத், அறப்போர் இயக்கத்தின் ஜெயராம் வெங்கடேசன், கணேசன், (RSYF), திராவிட முன்னேற்றக் கழகத்தின் திருவாளர்கள் K.N. நேரு மற்றும் S.M. நாசர், பாராளுமன்ற உறுப்பினர்கள் M.K.கனிமொழி, திருவாளர்கள் தயாநிதிமாறன். R.S. பாரதி. S.R.பார்த்திபன் மற்றும் திமுக தலைமைக் கழகப் பேச்சாளர்கள் ஆகியோர் மீது சுமார் 130 அவதூறு வழக்குகள் போடப்பட்டிருந்தன.
அரசியல் கட்சி பிரமுகர்கள் மீது தொடரப்பட்ட அனைத்து அவதூறு வழக்குகளையும் திரும்பப் பெறவும், அதன் மீதான அனைத்து மேல் நடவடிக்கைகளையும் கைவிடவும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை :அசத்தலான சுவையில் கிறிஸ்மஸ் ஸ்பெஷல் கல்கல் ரெசிபி செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள்: ரவை -50…
பிரேசில் : தெற்கு பிரேசிலின் கிராமடோ நகரத்தில் ஞாயிற்றுக்கிழமை சிறிய ரக விமானம் விபத்தானத்தில் குறைந்தது 10 பேர் உயிரிழந்த நிலையில்,…
கடலூர் : விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு தனியார் செய்தி நிறுவனத்திடம் பேட்டியளிக்கையில், 2026 சட்டமன்ற…
சென்னை : தேர்தலின் போது வாக்குச்சாவடிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை இனி பொதுமக்கள் பார்வையிட முடியாதபடி, தேர்தல் விதிகளை…
தெலங்கானா: புஷ்பா 2 சிறப்புக் காட்சி பார்க்க வந்தபோது நெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்த சம்பவத்தையடுத்து, நடிகர் அல்லு அர்ஜுன்…
டெல்லி : நாடு முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையானது நீட் (NEET) எனும் பொது நுழைவு தேர்வு…