வைகோ மீதான அவதூறு வழக்கில் ஆகஸ்ட் 30-ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
2006-ஆம் ஆண்டில் அப்போதைய முதலமைச்சராக இருந்த கருணாநிதி, மதிமுகவை உடைக்க முயற்சி என அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு வைகோ கடிதம் எழுதியதை தொடர்ந்து வைகோ மீது சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.
இது தொடர்பான வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.வைகோ தற்போது மாநிலங்களவை எம்.பி.யாக உள்ளார்.இந்த நிலையில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீதான அவதூறு வழக்கில் ஆகஸ்ட் 26-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்தது.அதாவது இன்று விசாரிப்பதாக அறிவித்தது.
இதனைத்தொடர்ந்து இன்று விசாரணைக்கு உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதால் வைகோவால் ஆஜராக இயலவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் தீர்ப்பை வருகிற 30-ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.
மெல்போர்ன் : ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட…
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…
திருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற இலக்கிய எழுத்தாளர், திரைப்பட திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் என பன்முகதிறமை கொண்ட எம்.டி.வாசுதேவன்…
சென்னை : அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024 போட்டியில் இந்திய இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ்,…
மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி…
சென்னை : சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் இரவு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு…