ஆர்.எஸ் பாரதி மீதான அவதூறு வழக்கிற்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி மீதான அவதூறு வழக்கிற்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பற்றி அவதூறு கருத்துக்களை தெரிவித்ததாக ஆர்.எஸ் பாரதி மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது.
எம்.பி எம்.எல்.ஏக்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஆர்.எஸ் பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். முதல்வர் செய்ய வேண்டிய மக்கள் பணி குறித்து பேசியதாகவும் தனிப்பட்ட ரீதியில் விமர்சிக்கவில்லை என ஆர்.எஸ் பாரதி தரப்பில் வாதம் செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து, ஆர்.எஸ் பாரதி நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்தும், விசாரணைக்கு தடை விதித்தும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
புதுச்சேரி : சிஎஸ்கே அணியின் தொடர் தோல்வி குறித்து கருத்து தெரிவித்த அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் வரும்…
டெல்லி : நேற்று (ஏப்ரல் 22) பிற்பகல் 3 மணியளவில் ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில், பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில்…
பஹல்காம் : நேற்று ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல் சம்பவத்தில்…
பஹல்காம் : நேற்று ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல்…
பஹல்காம் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான…