பெண் பத்திரிகையாளர்கள் குறித்து முகநூல் பக்கத்தில் அவதூறு கருத்து பதிவிட்ட விவகாரம் தொடர்பான சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி எஸ்.வி.சேகர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். இந்த விகாரத்தில் கிழமை நீதிமன்றத்தில் விசாரணை தொடரும் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. நடிகரும், பாஜக நிர்வாகியுமான எஸ்.வி.சேகர், பெண் பத்திரிகையாளர் குறித்து அவதூறான கருத்துக்கள் சமூகவலைத்தள பக்கத்தில் பதிவிட்டார்.
இதுகுறித்து பத்திரிகையாளர் அளித்த புகாரின் அடிப்படையில் அவர் மீது பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளை ரத்து செய்ய கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் மனு தாக்கல் செய்தார். அவதூறான கருத்துக்களை தெரிவித்ததற்காக நிபர்த்தனையற்ற மன்னிப்புக் கோரி பிரமாணப் பத்திரமும் தாக்கல் செய்தார். ஆனால் எஸ்.வி.சேகர் வழக்கை ரத்து செய்யக் கூடாது என்று பத்திரிகையாளர் பாதுகாப்பு சங்கம் மனு தாக்கல் செய்தது.
எஸ்.வி .சேகர் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்ய முடியாது. அவர் மீதான வழக்கை எம்.பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் ஆறு மாதங்களில் விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி எஸ்.வி.சேகர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது உச்சநீதிமன்றம். ஒரு முன்னாள் எம்எல்ஏ இப்படி நடக்கலாமா? பொறுப்புடன் இருக்கக் கூடாதா என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும், கீழமை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடரும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு, வழக்கில் ஆன்லைன் மூலமாக ஆஜராக அனுமதிக்க வேண்டும் என்ற எஸ்.வி.சேகர் தரப்பு கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. குடும்ப பிரச்னைகள் தொடர்பான விவகாரமாக இருந்தால், காணொளி மூலமாக ஆஜராக அனுமதிக்கலாம். இந்த வழக்கில் எப்படி அனுமதிப்பது? எனவும் கேள்வி எழுப்பினர்.
மும்பை : பாலிவுட் சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபலமான நடிகர் சயிப் அலிகான் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம்…
சென்னை : பொங்கல் பண்டிகை விடுமுறையை குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடும் பிரபலமான இடங்களில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவும்…
சென்னை : விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அடுத்ததாக…
மதுரை : நீண்ட காலமாக கிடப்பில் உள்ள தூத்துக்குடி - மதுரைக்கு அருப்புக்கோட்டை, விளாத்திகுளம் வழியாக புதிய ரயில்வே பாதை…
சென்னை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இந்த போட்டியில்…
மும்பை : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக விளையாடவுள்ள இந்திய வீரர்கள் குறித்த விவரத்தை இன்னும் பிசிசிஐ இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.…