கட்சியில் இருந்து நீக்கியது எப்படி அவதூறாகும்? என புகழேந்திக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி.
ஓபிஎஸ், ஈபிஎஸ் மீதான அவதூறு வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்த உத்தரவுக்கு எதிராக பெங்களூரு புகழேந்தி தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதிமுகவின் செய்தி தொடர்பாளர் இருந்த பெங்களூரு புகழேந்தி கட்சியில் இருந்து கடந்தாண்டு ஜூன் மாதம் நீக்கி அப்போதைய ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிக்கை மூலம் அறிவித்தனர்.
இது சம்மந்தமாக அறிக்கை தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதாக கூறி, அவர்களுக்கு எதிராக அவதூறு சட்டத்தின் கீழ் தண்டிக்கக்கோரி புகழேந்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இதன்பின் புகழேந்தி தொடர்ந்த அவதூறு வழக்கை ரத்து செய்ய கோரியும், விசாரணைக்கு தடைகோரியும் ஓபிஎஸ், ஈபிஎஸ் மனு தாக்கல் செய்திருந்தனர். இதனை விசாரித்த உயர் நீதிமன்றம், புகழேந்தியை கட்சியில் இருந்து நீக்கிய அறிக்கையில் எவ்வித அவதூறும் இல்லை என தெரிவித்து, ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆகியோருக்கு எதிரான அவதூறு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவு எதிராக உச்சநீதிமன்றத்தில் புகழேந்தி மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணையின்போது, கட்சியில் இருந்து நீக்கியது எப்படி அவதூறாகும்? என புகழேந்திக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. பின்னர் ஈபிஎஸ், ஓபிஎஸ் மீதான அவதூறு வழக்கு ரத்து செல்லும் என உத்தரவிட்டு, புகழேந்தி தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம். உட்கட்சி விவகாரத்தில் தலையிட மறுத்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : நடைபெற்ற இலங்கை புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே டி20 தொடர் கடந்த 1 வாரமாக நடைபெற்று வருகிறது. அந்த…
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…