சென்னை ஐஐடியில் ஆந்த்ராக்ஸ் நோயால் மான் உயிரிழப்பு..!
சென்னை ஐஐடியில் ஆந்த்ராக்ஸ் நோயால் மான் உயிரிந்துள்ளது. மேலும் 2 மான்களுக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மான்களின் மாதிரிகள் பரிசோதனைக்காக கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த மானின் உடல் , நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி அடக்கம் செய்யப்பட்டது. மான்களுக்கு நாய்கள் மூலம் ஆந்த்ராக்ஸ் நோய் பரவுகிறது என கால்நடை மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
விலங்குகளை யாரும் தொடக் கூடாது, உணவு வழங்க கூடாது என்று ஐஐடி நிர்வாகம், கிண்டி தேசிய பூங்கா அறிவுறுத்திவுள்ளது.