நண்பர் சீமானின் இழப்புக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் – கமலஹாசன்
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை மறைவுக்கு கமலஹாசன் இரங்கல்.
சிவகங்கை மாவட்டம் அரணையூரில் உள்ள வீட்டில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை செந்தமிழன் அவர்கள் காலமானார். இவரது மறைவிற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மக்கள் நீதி மையத்தின் ஒருங்கிணைப்பாளர் கமலஹாசன் அவர்கள் தனது ட்வீட்டர் பக்கத்தில், இரங்கல் தெரிவித்து ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘நண்பர் சீமானின் இழப்புக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்’ என பதிவிட்டுள்ளார்.
நண்பர் @SeemanOfficial இழப்புக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.
— Kamal Haasan (@ikamalhaasan) May 13, 2021