தீபாவளி சிறப்பு பேருந்து ! அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆலோசனை
தீபாவளிக்கு சிறப்பு அரசு பேருந்துகளை இயக்குவது குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆலோசனை நடத்தி வருகிறார்.
தீபாவளி பண்டிகை ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.அந்த வகையில் இந்த ஆண்டும் தீபாவளி சிறப்பாக கொண்டாட இருக்கிறது.தீபாவளியையொட்டி ஆண்டுதோரும் தமிழக போக்குவரத்து துறை சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
அந்த வகையில் இந்த ஆண்டும் இதற்கான ஏற்பாடுகள் தயாராகி வருகின்றது.இந்த நிலையில் தற்போது தீபாவளிக்கு சிறப்பு அரசு பேருந்துகளை இயக்குவது குறித்து போக்குவரத்து கழக அதிகாரிகளுடன் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.