அதிமுகவின் கே.பி.முனுசாமி பாமகவுக்கு ஸ்லீப்பர்செல்லாக பணியாற்றுகிறார் என தேமுதிக துணை பொதுச்செயலாளர் எல்.கே.சுதீஷ் கூறியுள்ளார்.
அதிமுக – தேமுதிக காட்சிகள் இடையே தொகுதி பங்கீடு குறித்து தொடர்ந்து பல கட்டங்கள் பேச்சுவார்த்தை நடத்தியும் இழுபறி நீடித்து வந்த நிலையில், தேமுதிக மாவட்டச் செயலாளா்களின் அவசர ஆலோசனைக் கூட்டம் சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் தலைவர் விஜயகாந்த் தலைமையில் நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் அதிமுக ஒதுக்கும் தொகுதிகளை ஏற்பது தொடர்பாக தலைவர் விஜயகாந்த் முடிவை ஏற்பதாக மாவட்ட செயலாளர்கள் தெரிவித்தாக கூறப்பட்டது. மேலும் தேர்தலில் கருத்து வேறுபாடு இன்றி ஒன்றிணைந்து அனைவரும் செயல்பட வேண்டும் எனவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
இந்த பரபரப்பான சூழலில் அதிமுகவில் இருந்து தேமுதிக விலகுவதாக அக்கட்சி தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். இந்நிலையில், இதுகுறித்து பேசிய தேமுதிக துணை பொதுச்செயலாளர் எல்.கே.சுதீஷ், இன்று தேமுதிக சார்பில் கேப்டன் விஜயகாந்த் தலைமையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர் கூட்டத்தில் ஒட்டுமொத்த தொண்டர்களின் கருத்துக்களை எடுத்துவைக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் நாங்கள் கேட்ட தொகுதிகளும், எண்ணிக்கைகளும் தராத காரணத்தினால் அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகுவதாக முடிவு எடுத்து தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். தேமுதிக தொண்டர்கள் அனைவருக்கும் இன்றைக்கு தீபாவளி தான் என்றும் தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் அதிமுக தோல்வியை சந்தித்து டெபாசிட்டை இழப்பார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, பாமகவுக்கு ஸ்லீப்பர்செல்லாக இருக்கிறார். அவர் அதிமுகவுக்கு செயல்படவில்லை, பாமாவிற்கு ஸ்லீப்பர்செல்லாக இருந்து கொண்டு கொள்கை பரப்பு செயலாளராக அங்கு பணியாற்றிக் கொண்டிருக்கிறார் என எல்.கே.சுதீஷ் ஆவேசமாக தெரிவித்துள்ளார். தனித்து போட்டியிடுவது குறித்து மீண்டும் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என துணை செயலாளர் பார்த்தசாரதி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தின் (ISRO) 100வது ராக்கெட் பணி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. இஸ்ரோ சமீபத்தில்…
அமெரிக்கா : கிராமி விருதுகள் இசை உலகில் மிகவும் மதிப்புமிக்க விருது விழாக்களில் ஒன்றாகும். இந்த கிராமி விருது நிகழ்ச்சி…
மும்பை : நேற்று இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி விளையாடிய 5வது டி20 போட்டியானது, மும்பை…
சென்னை : சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர் உச்சம் கண்டு வந்த தங்கம் விலை, இன்று சற்று ஆறுதல்…
சென்னை : இன்று மறைந்த முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா எனும் சி.என்.அண்ணாதுரை அவர்களின் 56வது நினைவு தினத்தை முன்னிட்டு…
மதுரை : இந்து கடவுள் முருகனின் அறுபடைவீடுகளில் முதல் வீடாக பார்க்கப்படுவது மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் உள்ள முருகன் கோயில்.…