தீபாவளி பட்டாசு விபத்து! சிகிச்சை அளிக்க தயார் நிலையில் உள்ள சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை!
சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில், சிறப்பு தீக்காய வார்டு அமைக்கப்பட்டுள்ளது.
மக்கள் அனைவரும் தீபாவளி கொண்டாட தயாராகி வருகிறனர். பொதுவாக திருவிழாக்கள் என்றாலே, நமது நினைவுக்கு வருவது பட்டாசுகளும், புத்தாடைகளும் தான். பட்டாசுகள் இல்லாமல் எந்த விழாவும் கொண்டாடப்படுவதில்லை.
இந்நிலையில், தீபாவளி கொண்டாட்டத்தில், வெடி வெடிக்கும் போது எதிர்பாராமல் வெடி விபத்துக்கள் ஏற்படுவதுண்டு. இந்த விபத்தால் பாதிக்கப்படுவோருக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிப்பதற்காக, சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில், சிறப்பு தீக்காய வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு வார்டை மருத்துவமனை டீன் வசந்தமணி அமைத்துள்ளார்.
மேலும், பட்டாசு வெடிக்கும் போது, பெரியவர்கள் முன்னிலையில் தான், குழந்தைகள் பட்டாசு வெடிக்க வேண்டும் என்றும், பட்டாசு வெடிக்கும் போது, பருத்தி ஆடைகள் அணிந்திருக்க வேண்டும் என்றும், அருகில் வாளியில் தண்ணீர் வைத்துக் கொள்ள வேண்டும்