தீபாவளி பண்டிகை : இப்பொழுதே ஆன்லைனில் பேருந்து முன்பதிவுகள் தொடங்கியது!
தீபாவளி பண்டிகையை ஒட்டி இப்பொழுதே ஆன்லைனில் பேருந்து முன்பதிவுகள் தொடங்கியது.
தமிழகம் முழுவதிலும் கொரானா வைரஸ் ஊரடங்கால் கடந்த ஆறு மாதங்களாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கிய வண்ணம் இருந்தனர். இந்நிலையில் தற்பொழுது வருகிற மாதம் 14ஆம் தேதி சனிக்கிழமை தீபாவளி பண்டிகை வர இருக்கிறது. இந்நிலையில் மக்கள் இத்தனை நாட்கள் வீட்டிலேயே முடங்கி இருந்தாலும் தற்போது அரசு சில தளர்வுகள் மக்களுக்காக அறிவித்துள்ள நிலையில் வெளியூர்களுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வருடம் தோறும் தீபாவளி கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகை நேரங்களில் அரசு சிறப்பு பேருந்துகளை இயக்குவது வழக்கம். அது போல் இந்த வருடமும் அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
450 பேருந்துகள் அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் தற்பொழுது பயன்படுத்தப்பட்டுக் கொண்டுள்ளன. இதனை அடுத்து தீபாவளியை ஒட்டி 700 சிறப்பு பேருந்துகளை கூடுதலாக இயக்க அரசு திட்டமிட்டுள்ளது. இந்த பேருந்துகளுக்கான முன்பதிவு இன்னுமொரு மாதம் தீபாவளிக்கு இருந்தாலும் தற்போது முன்பதிவு தொடங்க ஆரம்பித்துவிட்டது. மக்களும் ஆர்வமாக தீபாவளி சிறப்பு பேருந்துகள் முன்பதிவு செய்ய தொடங்கிவிட்டனர். www.tnstc.in என்ற இணையதளத்தில் இதற்காக அணுகலாம்.